தவெக தலைவர் விஜய் மீது போலீசார் வழக்கு..!!
Mar 31, 2026, 09:38 IST
தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் துவங்கியது. முதல் நாளில், பெரம்பூரில் த.வெ.க., தலைவர் விஜய்மனு தாக்கல் செய்தார். பிறகு, தன் போட்டியிடும் பெரம்பூர் தொகுதி, முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரசாரம் செய்தார்.
மக்களிடம் விசில் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். கொளத்தூரில் பிரசாரத்தின் போது தேர்தல் விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 5 ஒலி பெருக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தேர்தல் அதிகாரிகளிடம் அளித்த உறுதிமொழியை மீறி 30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த புகார் அடிப்படையில் தான் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.