விஜயபாஸ்கர் மீது போடப்பட்ட வழக்கை கைவிட்ட காவல்துறை
தவெக நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கருக்கு எதிரான மோசடி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை இல்லை என்ற நிலையில் அவர் மீது ஆலங்குடி அதிமுக வேட்பாளர் தன.விமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய போலீஸுக்கு உத்தரவிட்டது. சி.விஜயபாஸ்கர் மீதான பண மோசடி புகாரில் முகாந்திரம் இல்லை. புதுக்கோட்டை மாவட்ட டிஎஸ்பி விசாரணையில் தெரியவந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை அளித்தது. இதனையடுத்து ரூ.4 கோடி மோசடி செய்ததாக சி.விஜயபாஸ்கர் மீதான புகாரை விசாரிக்க கோரிய ஆலங்குடி அதிமுக வேட்பாளர் தொடர்ந்த புகார் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.