×

விமான நிலையத்தில் பணியில் இருந்த காவலர் திடீர் மரணம்..!

சமீப காலமாக தமிழகத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் உயிரிழந்து கொண்டிருக்கையில், கொரோனா பாதிப்பு இல்லாமலே பலர்உயிரிழக்கின்றனர். அதே போல சேலம் மாவட்டத்தில் பணியில் இருந்த காவலர் திடீரென உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் ரயில்வே நிலையம் அருகே வசித்து வந்த தலைமை காவலர் கனிபிரசாத்க்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் நேற்று மாலை விமான நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஜன்னி வந்ததால்,
 

சமீப காலமாக தமிழகத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் உயிரிழந்து கொண்டிருக்கையில், கொரோனா பாதிப்பு இல்லாமலே பலர்உயிரிழக்கின்றனர். அதே போல சேலம் மாவட்டத்தில் பணியில் இருந்த காவலர் திடீரென உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் ரயில்வே நிலையம் அருகே வசித்து வந்த தலைமை காவலர் கனிபிரசாத்க்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இவர் நேற்று மாலை விமான நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஜன்னி வந்ததால், துடித்துக் கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த சக காவலர்கள் உடனே, மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கனிபிரசாத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த செய்தி காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விமான நிலையத்தில் பணியாற்றியதால் கொரோனா பரவியிருக்குமோ என்று கேள்வி எழுந்துள்ளது. இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.