×

திமுக சார்பில் வழங்கிய நிவாரண உதவிகளை பெற வந்த பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி!

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தாக்கம் இந்தியாவில் குறையாத நிலையில் மேலும் ஜூன் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் 5 வது முறையாக நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு நேரத்தில் கட்சி பாகுபாடு இல்லாமல் பலரும் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவி வருகிறார்கள். (கோப்புப்படம்) அந்த வகையில் சென்னை கே.கே.நகரில் திமுக
 

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.  இருப்பினும் கொரோனா தாக்கம் இந்தியாவில் குறையாத நிலையில் மேலும் ஜூன் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் 5 வது முறையாக நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதேபோல் தமிழகத்தில் ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  ஊரடங்கு நேரத்தில் கட்சி பாகுபாடு இல்லாமல் பலரும் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவி வருகிறார்கள்.

(கோப்புப்படம்)

அந்த வகையில் சென்னை கே.கே.நகரில் திமுக சார்பில் வழங்கிய நிவாரண உதவிகளை பெற வந்த பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே.நகரில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டு வந்த நிலையில் நிவாரண உதவிகளை பெற வந்த மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.