×

பாஜக நிர்வாகிக்கு மிரட்டல் : திமுக எம்எல்ஏ மூர்த்தி மீது வழக்குப்பதிவு!

தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பியதாக மதுரை கிழக்கு சட்டமன்ற திமுக எம்எல்ஏ மூர்த்தி தனது ஆதரவாளர்களுடன் பாஜக இளைஞரணி கோட்ட பொறுப்பாளர் சங்கரபாண்டி என்பவரின் வீட்டிற்கு சென்று தனது ஆதரவாளர்களுடன் அவர்களை மிரட்டிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாஜக இளைஞரணி கோட்ட பொறுப்பாளர் சங்கரபாண்டி தன்னையும் தனது மனைவியையும் தாக்க முயன்றது உடன் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்ததாக மதுரை கிழக்கு சட்டமன்ற திமுக எம்எல்ஏ மூர்த்தி
 

தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பியதாக மதுரை கிழக்கு சட்டமன்ற திமுக எம்எல்ஏ மூர்த்தி தனது ஆதரவாளர்களுடன் பாஜக இளைஞரணி கோட்ட பொறுப்பாளர் சங்கரபாண்டி என்பவரின் வீட்டிற்கு சென்று தனது ஆதரவாளர்களுடன் அவர்களை மிரட்டிய காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாஜக இளைஞரணி கோட்ட பொறுப்பாளர் சங்கரபாண்டி தன்னையும் தனது மனைவியையும் தாக்க முயன்றது உடன் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்ததாக மதுரை கிழக்கு சட்டமன்ற திமுக எம்எல்ஏ மூர்த்தி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில் திமுக எம்எல்ஏ மூர்த்தி மீது உமச்சிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.