×

நீதிபதியை தரக்குறைவாக பேசிய விவகாரம்; காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அதில் இன்று நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார். நேற்று கோவில்பட்டி கிளைச்சிறையில் நடைபெற்ற விசாரணையின் போது மாஜிஸ்திரேட்டை ஒருமையில் பேசியதாக தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன்,காவலர் மகாராஜன்
 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அதில் இன்று நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்.

நேற்று கோவில்பட்டி கிளைச்சிறையில் நடைபெற்ற விசாரணையின் போது மாஜிஸ்திரேட்டை ஒருமையில் பேசியதாக தூத்துக்குடி ஏ.எஸ்.பி குமார், டி.எஸ்.பி பிரதாபன்,காவலர் மகாராஜன் ஆகிய 3 பேர் மீது அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர்கள் இன்று மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதனிடையே நீதிபதியை அவமதித்து பேசிய காவலர் மகாராஜன் மட்டும் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், இன்று நீதிபதியை ஒருமையில் பேசிய வழக்கில் காவலர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கின்றனர்.