80 வயது மூதாட்டி பலாத்காரம்- குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தராசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி நேற்று மாலை அந்த கிராமத்தில் நடை பயிற்சி சென்றபோது அங்கு மது அருந்தி கொண்டிருந்த நபர், அவரை சவுக்கு தோப்பிற்கு அழைத்துச் சென்று வாயில் மண்ணை போட்டு காது மற்றும் மூக்கில் உள்ள நகைகளை பறித்து பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அதே பகுதியை சேர்ந்த சுந்தரவேல் என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதும் காடாம்புலியூர் அருகே அவர் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பண்ருட்டி போலீசார் காடாம்புலியூர் பகுதிக்கு சென்று சுந்தரவேலை பிடிக்கும் முற்பட்டபோது அவர் கையில் வைத்திருந்த கத்தியால் காவலர்களை வெட்டத் துவங்கினார். இதில் இரண்டு காவலர்கள் காயமடைந்த நிலையில் பண்ருட்டி ஆய்வாளர் தனது துப்பாக்கியால் தற்காப்பிற்காக சுந்தரவேலை சுட்டபோது சுந்தரவேலின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து சுந்தரவேல் மற்றும் இரண்டு காவலர்களும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சுந்தரவேல் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடலூர் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், பண்ருட்டி அடுத்த திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டியை வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார் இதனை தொடர்ந்து அந்த மூதாட்டியை மீட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் பண்ருட்டி அடுத்த எஸ்.கே. பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இன்றைக்கு காலையில் காடாம்புலியூர் அருகே இருக்கக்கூடிய ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் தெரியவந்ததையடுத்து, அங்கு இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் குபேந்திரன், ஹரிஹரன் ஆகியோர் சுந்தரவேல் பதுங்கி இருந்த இடத்திற்கு சென்றனர். அப்போது பதுங்கி இருந்த சுந்தரவேலை பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அவர் கையில் இருக்கக்கூடிய கத்தியை வைத்து மிரட்டி வெட்ட வந்தார். அப்போது இன்ஸ்பெக்டர் எச்சரித்தார். அதையும் மீறி அவர் வந்து குபேந்திரன் என்ற காவல் காவலரை கையில் வெட்டினார். அப்போது போலீசாரை தற்காக்கும் பொருட்டு போலீசார் சுந்தரவடிவேல் காலில் முட்டியில் சுட்டு பிடித்தார். மேலும் சுந்தர வடிவேலையும் அந்த காவலரையும் கொண்டு வந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த சுந்தரவேல் மீது தமிழக முழுவதும் நான்கு கொள்ளை வழக்குகள் உள்ளது. மேலும் சிறை சென்று இரண்டு நாட்கள் முன்புதான் இங்க வெளிவந்திருக்கிறார். நேற்று மதுபோதையில் இந்த நிகழ்வு நடைபெற்ற உள்ளது மேலும் மேற்கொண்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் கூட்டு, பாலியல் பலாத்காரம் இல்லை இந்த சுந்தரவேல் தான் சம்பவத்தில் ஈடுபட்டு என கூறினார்.