வேட்பாளராக இருந்தும் வாக்காளராக கடமை தவறிய பாமக பொருளாளர்
சிவகாசி வேட்பாளராக இருந்தும் வாக்காளராக கடமை தவறினார் பாமக பொருளாளர்.
சிவகாசி ஏவிடி பாடசாலைத் தெருவை ( கதவு இலக்கம் 55 -A) விலாசமாகக் கொண்டு அன்புமணி தலைமையிலான பாமகவின் மாநிலப் பொருளாளராக இருப்பவர் திலகபாமா. இவர்( சென்னை )பெரம்பூர் சட்டமன்ற த் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் அன்புமணி தலைமையிலான பாமக வேட்பாளராக போட்டியிட்டார். பெரம்பூர் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்ட திலகபாமா சிவகாசி தென்பகுதி மாநகராட்சி ஏவிடி பெண்கள் உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனக்குண்டான வாக்கைப் பதிவு செய்யாமல் ஜனநாயகக் கடமை யிலிருந்து தவறி யுள்ளார்.
சென்னை பெரம்பூர் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுவதாலும், சிவகாசிக்கு நேரில் வருகை தந்து தன்னுடைய வாக்கை செலுத்த விமானம் மூலமாக வந்து செல்ல ஏற்பாடு செய்திருந்த நிலையில், சென்னையில் ஏற்பட்டிருந்த கடுமையான வாகனப் போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானத்தை தவறவிட்ட காரணத்தால் சிவகாசிக்கு நேரில் வருகை தந்து தன்னுடைய பெயர் பதிவு செய்யப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாக அன்புமணி தலைமையிலான பாமக வேட்பாளர் திலகபாமா தரப்பிலிருந்து ஜனநாயகக் கடமையைத் தவறியதற்கான காரணமாக கூறப்பட்டுள்ளது.