புதுச்சேரியில் பாமக தனித்து போட்டி?
Mar 16, 2026, 21:55 IST
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வன்னியர் சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 5 தொகுதிகள் கேட்டோம் எனக் கூறிய பாமக அமைப்பாளர் மதியழகன், எங்களது தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 3வது அணையாக போட்டியிடவுள்ளோம். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை கட்சி தலைவர் அன்புமணிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என பாமக அமைப்பாளர் மதியழகன் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள பாமக, புதுச்சேரியில் தனித்து களம் காண திட்டமிடப்பட்டுள்ளது.