#BREAKING பாமக முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
Mar 25, 2026, 17:24 IST
2026 பா.ம.க. வேட்பாளர்கள் முதல் பட்டியலை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் 23.04.2026ஆம் நாள் நடைபெறவிருக்கும் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கீழ்வேளூரில் பாமக பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், அம்பத்தூரில் மாநிலத் துணைத் தலைவர், கே.என். சேகர், செஞ்சியில் பாமக இளைஞரணித்தலைவர் கணேஷ் குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள்.