×

பாமக நான் உருவாக்கிய கட்சி, அன்புமணியை நானே கட்சியில் இருந்து நீக்குவேனா?- ராமதாஸ்

 

 

அன்புமணி ராமதாசை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி விடுவேன் என்று சில வதந்திதகள் பரவின... அப்படி நான் செய்வேனா?   மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சிலரை கலந்து கொள்ளவேண்டாமென நிர்வாகி ஒருவர் தெரிவித்தது தனக்கு தெரியுமென்றும் சமூக நீதி பேரவை கூட்டத்தில் ராமதாஸ் பகிரங்கமாக தெரிவித்தார்.

திண்டிவனம் அருகேயுள்ள  தைலாபுரம்  இல்லத்தில் பாமக நிறுவனர்  ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சமூகநீதிப் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் பேசிய ராமதாஸ், பாமக நான் உருவாக்கிய கட்சி. கட்சியில் அன்புமணி ராமதாசை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி விடுவேன் என்று நான் கூறியதாக சில வதந்திகள் பரவின. அப்படி நான் செய்வேனா? வதந்தியை கிளப்பிவிடுவது யார் என்று எனக்கு தெரியும். பாமகவை உறுவாக்கிய நான் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினேன். அப்போது 108 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களை கலந்து கொள்ள வேண்டாமென கூட்டத்தில் உள்ள ஒருவர் தெரிவித்திருக்கிறார். அவரை அழைத்து கேட்டதற்கு அவர் மறுக்கிறார். ஆனால் எனக்கு பேசியது தெரியும்” என்றார்.