“எங்கள் கூட்டணி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்”- ராமதாஸ்
Mar 20, 2026, 20:11 IST
தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளர்.
தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எங்கள் கூட்டணியில் சேர விரும்புவோர் என்னிடமும், சசிகலா அம்மையாரிடமும் பேசலாம். எங்கள் கூட்டணி அறிவிப்பு, இப்போதே பலருக்கும் நடுக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம். இது வெற்றிக் கூட்டணி்” என்றார்.