“இதற்கெல்லாம் பதில் சொல்வது எனக்கு அசிங்கம்”- ராமதாஸ்
Updated: Feb 11, 2026, 16:06 IST
இதற்கெல்லாம் பதில் சொல்வது எனக்கு அசிங்கம் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். ஜிகே மணி துரோகி என்று அன்புமணி விமர்சனம் குறித்த கேள்விக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இவ்வாறு பதிலளித்தார்.
திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர்,மருத்துவர் ராமதாஸ், “கூட்டணி தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை. முடிவு எடுக்கப்படும். முடிவு எடுப்போம். பேசிக் கொண்டிருக்கிறோம். டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணி தொடர்பாக, சில கட்சிகள் தொடர்பில் உள்ளனர் பேசிக்கிட்டு இருக்கிறோம். ஜிகே மணி துரோகி என்று அன்புமணி விமர்சனம் செய்கிறார். இதற்கெல்லாம் பதில் சொல்வது எனக்கு அசிங்கம்” என்றார்.