×

“கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம்”- ராமதாஸ்

 

கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருகிறோம் என பாமக நிறுவனர், மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக சார்பில் வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் கடந்த ஒன்பதாம் தேதி முதல் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் 3100 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.* *மூன்றாவது நாளாக இன்றும் விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. நாளை விருப்ப மனு அளிக்க கடைசி நாள். இந்நிலையில் இன்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி. மருத்துவர் ராமதாசின் பேரன்கள் சுகந்தன் (பொதுக்குழு உறுப்பினர்.) முகுந்தன். பொதுச் செயலாளர் முரளி சங்கர். மற்றும் பாட்டாளி சமூக ஊடக பேரவையின் தலைவர் சோழன் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். 

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், “கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். நான் சென்னைக்கு போகக்கூடாதா? 100 வேலை இருக்கும் நான் செல்வேன், அது உங்களிடம் சொல்ல தேவையில்லை. இதுவரை எங்களிடம் பாஜகவோ, திமுகவோ கூட்டணி குறித்து பேசவில்லை. அமைதியாக, நல்லபடியாக தேர்தல் நடக்க வேண்டும்” என்றார்.