அன்புமணி தரப்பில் விருப்ப மனு - ராமதாஸ் தரப்பு போலீசில் புகார்
அன்புமணி தரப்பில் விருப்ப மனு - ராமதாஸ் தரப்பு போலீசில் புகார்அன்புமணி தரப்பில் இன்று முதல் விருப்பமனு விநியோகம் செய்யப்படும் நிலையில் தேர்தல் ஆணையம் மற்றும் டிஜிபி அலுவலகத்தில் மின்னஞ்சல் வாயிலாக ராமதாஸ் தரப்பு புகாரளித்துள்ளது.
2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பாமக சார்பாக வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோருக்கு இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை சென்னையை அடுத்த பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் விருப்பமனுக்கள் வழங்கப்பட உள்ளன. இன்று முதல் வரும் 20 ம் தேதி வரை நடைபெற உள்ள விருப்ப மனுக்கள் விநியோகத்தை சென்னையை அடுத்த பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், அன்புமணி தரப்பின் விருப்ப மனு விநியோகத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாமகவில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் சட்டவிரோதமாக விருப்பமனுக்களை விநியோகம் செய்து பணம் வசூலித்து மோசடி செய்தவதாக டிஜிபியிடமும், தேர்தல் ஆணையத்திடமும் மின்னஞ்சல் வாயிலாக ராமதாஸ் தரப்பு புகார் அளித்துள்ளது. அன்புமணியின் விருப்ப மனு விநியோகத்தில் பாமக தொண்டர்கள் ஏமாறக் கூடும் என்பதால் டிஜிபி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் வலியுறுத்தியுள்ளார்.