×

“ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன்” - அருள்

 

ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன் என பாமக எம்.எல்.ஏ., அருள் பேட்டியளித்துள்ளார்.


விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக எம்.எல்.ஏ. அருள், “விசிக தலைவர் திருமாவளவனுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ராமதாஸ் பெறாத பிள்ளை திருமாவளவன். வன்னியர்களையும், தலித் மக்களையும் இரண்டு தண்டவாளங்களாக பார்ப்பவர்தான் ராமதாஸ். அப்படி இருக்க எங்களுக்கு யாருகே எதிரி இல்லை. தமிழ்நாட்டில் ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலைகளை திறந்தவர் ராமதாஸ். ராமதாஸ் மீது எந்த வழக்கும் இல்லை. யாருடைய மிரட்டலுக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. தைலாபுரம் இல்லத்தில்தான் கூட்டணிக்கான கையெழுத்து போடப்படும். அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு உதாரணம்தான் டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இணைந்தது. பாமக அவசர நிர்வாக குழு கூடவுள்ளது. 40 தொகுதிகளை தேர்வு  செய்துள்ளார். அந்த தொகுதியில் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும், கூட்டணி, வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளோம்” என்றார்.