×

அன்புமணி தரப்பினர் ராமதாசை கொலை செய்ய திட்டமிடுகின்றனர்- அருள் எம்.எல்.ஏ

 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் ராமதாசை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர், சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் கொலை மிரட்டங்கள் மிகவும் அச்சமளிக்கிறது என தலைமை செய்தி தொடர்பாளர் அருள் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அருள் எம்.எல்.ஏ, “பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் மருத்துவர் ராமதாஸின் முகநூல் மற்றும் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளது, பாவேந்தன் என்ற நபர் ராமதாசு ஐயாவின் உதவியாளராகவும் சமூக வலைதளங்கள் மேற்பார்வையாளராகவும் இருந்தார், தற்போது அவரை அன்புமணி குழுவினர் விலை கொடுத்து வாங்கி விட்டனர். அதனால் அவர் சமூக வலைதளங்களை முடக்கியுள்ளார். அன்புமணி குழுவினர் சமூக வலைத்தளங்களில் ஐயாவின் பெயரை நாசம் செய்துவருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் கொலை மிரட்டில் அளிக்கும் வகையிலும் பதிவுகள் செய்து வருகின்றனர். கொலை செய்வதற்கு திட்டமிடுகின்றனரா என்று அச்சம் ஏற்படுகிறது. தேர்தல் ஆணையம் கூடுதல் தகவல்கள் கேட்டுள்ளது , கவுரவ தலைவர் தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியுள்ளார். முறையாக பரிசீலனைத்து தேர்தல் ஆணையம் உரிய பதில் அளிக்கும்” என்றார்.