தொடங்கியது பாமக பொதுக்குழு
சென்னை மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
உயர்நீதிமன்ற அனுமதியுடன் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. பாமக நிறுவனர் ராமதாஸ் இன்றி நடைபெறும் முதல் பொதுக்குழு இதுவாகும். இதில் பல்வேறு மாவட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். கட்சியின் மூத்த உறுப்பினரும், வன்னியர் சங்க போராட்டங்களில் தீவிர பங்காற்றியவருமான மதுரை கோமதியம்மாள் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அன்புமணி தலைமையில் நடைபெற்று வரும் பாமக பொதுக் குழு கூட்டத்தில் ராமதஸுக்கு தனியாக ஒதுக்கப்பட்ட நாற்காலி அவர், பங்கேற்காததால் காலியாக உள்ளது.
முன்னதாக பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராமதாசும், அன்புமணியும் தந்தை மகனாக, கட்சி மற்றும் மக்களின் நலனுக்காக பல ஆண்டுகளாக ஒன்றாக உழைத்ததால் இருவருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. காணொலி மூலம் ஆஜரான ராமதாஸ் அன்புமணியுடன் பேச விரும்பவில்லை என தெரிந்த பிறகு வழக்கு தகுதியின் அடிப்படையில் விசாரிக்க நீதிபதி முடிவெடுத்தார். ஆனால் அதிலும் பலனளிக்காததால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க எந்த காரணமும் இல்லாததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.