பாமக தலைவர் பதவி - அன்புமணிக்கு வழிவிட்ட ராமதாஸ்
Jul 22, 2026, 15:07 IST
பாமகவின் தலைவராக தன்னை அறிவிக்கக்கோரிய மனுவை ராமதாஸ் திரும்ப பெற்றார்.
பாமக தலைவராக தன்னை அறிவிக்க கோரி தொடர்ந்த வழக்கை ராமதாஸ் திரும்ப பெற்றார். தங்களுக்குள்ளான பிரச்சனையை சுமூகமாக தீர்த்து கொண்டதாகவும் தனது வழக்கை திரும்ப பெறுவதாகவும் ராமதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கை திரும்ப பெறுவதாக ராமதாஸ் கூறியதை அடுத்து, வழக்கை முடித்து வைத்தது சென்னை உரிமையியல் நீதிமன்றம்.