தியாகி சங்கரலிங்கனார் நினைவை போற்றுவோம்...புகழஞ்சலி செலுத்துவோம் - ஜி.கே.மணி
தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி 76 நாட்கள் உண்ணாநிலை மேற்கொண்டு உயிர்நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு தினத்தில் அவரது நினைவை போற்றுவோம், புகழஞ்சலில் செலுத்துவோம் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் மெட்ராஸ் மாகாணம் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றக் கோரி தியாகி சங்கரலிங்கனார் 1956 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 27 ஆம் நாள் விருதுநகர் சோளக்கரைமேட்டில் தனிநபராக உண்ணாநிலை மேற்கொண்டார். அதன் பின்னர் விருதுநகர் தேசபந்து மைதானத்திற்கு இடம் மாற்றி உண்ணாநிலையை தொடர்ந்திருந்தார். 60 நாட்கள் கடந்த நிலையில் உடல் நிலை மிகவும் மோசமானதால், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, மா.பொ.சி,தோழர் ஜீவா ஆகியோர் உண்ணாநிலையை கைவிடுமாறு வலியுறுத்தியும் அவர் கைவிடவில்லை. மேலும் உண்ணாநிலையை தொடர்ந்த நேரத்தில் 76 ஆம் நாள் 1956 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் பதினாறாம் நாள் உயிர் நீத்தார். இது மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியது.