×

திமுக எம்.பியை தாக்க முயன்ற பாமகவினர் : தருமபுரியில் பரபரப்பு!

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தை சந்திக்கச் சென்ற திமுக எம்.பி.யை பாமகவினர் தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் பரப்புரை நடந்து வருகிறது. இதில் திமுக எம்.பி.செந்தில்குமார் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் பரப்புரை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் இறந்த சுப்ரமணியன் குடும்பத்தை சந்தித்து நிதியுதவி வழங்க நத்தமேடு கிராமத்திற்கு சென்றார், அங்கு சுப்பிரமணியின்
 

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தை சந்திக்கச் சென்ற திமுக எம்.பி.யை பாமகவினர் தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்காக திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் பரப்புரை நடந்து வருகிறது. இதில் திமுக எம்.பி.செந்தில்குமார் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் பரப்புரை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் இறந்த சுப்ரமணியன் குடும்பத்தை சந்தித்து நிதியுதவி வழங்க நத்தமேடு கிராமத்திற்கு சென்றார், அங்கு சுப்பிரமணியின் நினைவு தூணுக்கு மரியாதை செலுத்த முற்பட்டபோது அங்கிருந்த பாமகவினர், செந்தில்குமாரை தடுத்து நிறுத்தி தாக்க முயன்றனர். அத்துடன் ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர்.

இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் எம்.பி. செந்தில்குமாரை பத்திரமாக மீட்டு அரசு சேவை மையத்தில் அமரவைத்தனர். இதை தொடர்ந்து அங்கு செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. செந்தில்குமார், பாமகவை சேர்ந்த சுப்ரமணியின் நினைவிடம் வன்னியர் சங்க இடத்தில் உள்ளது. அதனால் நீ உள்ளே செல்ல கூடாது என தடுத்து நிறுத்தினர். சுப்ரமணியின் குடும்பத்தினரை நேற்று இரவே வேறு எங்கேயோ கடத்தி சென்று விட்டுள்ளனர். அவரது குடும்பத்துக்கு கொடுக்க நினைத்த நிதி என்னிடம் தான் உள்ளது. அதை எப்போது வேண்டுமானாலும் அவரது மனைவி வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.