×

அன்புமணிக்கே மாம்பழம் சின்னம்- வழக்கறிஞர் பாலு

 

ஆவணங்களின் அடிப்படையில் பாமக தலைவர் அன்புமணி என்று நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பாலு, “பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ்தான் தொடர்கிறார்.அவருக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியதை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆவணங்களின் அடிப்படையில் பாமக தலைவர் அன்புமணி என்று நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. பாமகவின் தலைவர் அன்புமணிதான் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதி செய்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை ராமதாஸ் தரப்பு ஏற்கவில்லை என்பதிலிருந்தே அது எங்களுக்கு சாதகம் என புரியும். தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை பாமக தலைவர் அன்புமணிதான். தேர்தல் ஆணையத்தின் வாதத்தினை நீதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளார். ஏற்கனவே உள்ள ஆவணங்களின் அடிப்படையில்தான் பாமக விஷயத்தில் முடிவெடுத்துள்ளோம்” என்றார்.