“தேர்தல் ஆணையம் விலை போய்விட்டது! அன்புமணி பாமக உறுப்பினரும் இல்லை; தலைவரும் இல்லை”- அருள்
தேர்தல் ஆணையம் நியாயமற்ற நம்பக தன்மையற்ற பணத்திற்கு விலை போகிற ஆணையமாக உள்ளது என சட்டமன்ற உறுப்பினர் அருள் பகிரங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி , ராமதாஸ் அணியின் செய்தி தொடர்பாளரும் , சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான அருள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோயா பல்ஸ்க்கு நிகரான கூட்டம் அன்புமணி கூட்டம் , பொய்யை மட்டுமே வைத்துக்கொண்டு அரசியல் செய்கின்றனர். அதே பொய்யுடன் தேர்தல் ஆணையத்தையும் விலைக்கு வாங்கி உள்ளனர். தேர்தல் ஆணையம் மறுசீராய்வு மனு போட்டதில் உள்நோக்கம் உள்ளது. பணத்தை கொடுத்தும் அதிகாரத்தை பயன்படுத்தியும் தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். எங்களிடம் உள்ள ஆவணங்களை வைத்து அன்புமணியை தலைவராக கூறுகிறோம் என்று தேர்தல் ஆணையம் தான் பொய்யான செய்தியை கூறுகிறது. உயர் நீதிமன்ற தீர்ப்புபை பொறுத்தவரை கடந்த 04/12/25 ல் வழங்கிய தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை, அப்படியேதான் உள்ளது.டெல்லி உயர்நீதிமன்றம் அன்புமணி தான் தலைவர் என்று கூறவில்லை. தீர்ப்பின் பாரா 17 , 38 ல் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
மாம்பழ சின்னத்தை உரிமை கொண்டாடும் உரிமை இருவருக்கும் இல்லை. அப்போது தேர்தல் ஆணையம் கூறியது, ஆனால் தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறது. சிவில் நீதிமன்றம் தலைவர் யார் என்பதை சொல்லும் , அதுவரை அன்புமணி தலைவர் யார் இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர். எனவே சிவில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில், ராமதாஸ் தான் தலைவர் என்று தீர்ப்பு வரும். பாட்டாளி மக்கள் கட்சி அங்கீகாரம் பெற்ற கட்சி இல்லை அது பதிவு செய்யப்பட்ட கட்சி. அதனால் அந்த கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என்று சொன்ன தேர்தல் ஆணையம் , எப்படி தற்போது தலையிடுகிறது. அன்புமணி தன்னிடம் உள்ள அதிகாரம் , பணப் பலத்தை வைத்து தேர்தல் ஆணையத்தை வளைத்து போட்டுள்ளார். அவர் ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்தவர் , எனவே அதிகார வர்க்கத்தோடு தொடர்பு இருப்பதால் விலை பேசி இருக்கலாம். அதில் அன்பை பரிமாறியனாரோ , அல்லது வேறு ஏதேனும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க அன்புமணிக்கு ஆதரவாக தான் செயல்பட்டு வருகிறது. அன்புமணி தற்போது கட்சியில் உறுப்பினரும் இல்லை , அவர் தலைவரும் இல்லை. ஆனால் தேர்தல் ஆணையத்தின் மூலமே மறு சீராய்வு போட்டு உள்ளனர்.
தேர்தல் ஆணையத்திடம் நீதி இல்லை , நேர்மை இல்லை , விலை போகிற நம்பக தன்மையற்ற ஆணையமாக உள்ளது. கூட்டணி குறித்து ராமதாஸிடம் பல பேர் பேசி வருகிறார்கள். ஒரு வாரத்தில் கூட்டணி பற்றி முடிவு சொல்லப்படும். ஆக்க பொருத்தவர்கள் ஆரப் பொறுக்க வேண்டும். தைலாபுரம் தோட்டத்தில் உள்ள கதவு தற்போது மூடப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்படும்.அன்று கூட்டணி முடிவாகும் உங்கள் முன்பு கையெழுத்திட்டு வெளியிடுவோ. அது வெற்றி கூட்டணியாக இருக்கும். தந்தைக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். அப்பாவுக்கு மகன் கட்டுப்பட்டு தான் இருக்க வேண்டும், அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இன்றைய முதலமைச்சர், அப்படி கட்டப்பட்டு தான் இருந்தார். அப்பாவை மதிக்காதவர்கள் அரசில் வெல்ல முடியாது , இதுதான் உலக நியதி , இதில் அன்புமணி விலக்கல்ல” என்றார்.
.