அன்புமணியுடன் கூட்டணி வைப்பவர்கள் ஏமாந்துதான் போவார்கள்- அருள்
Jan 9, 2026, 19:22 IST
சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விருப்பு மனு பெறும் நிகழ்ச்சியை, தைலாபுரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், “எடப்பாடி பழனிசாமி அண்ணன் எதற்காக அன்புமணியை அழைத்து கூட்டணி ஒப்பந்தம் போட்டார் என்று தெரியவில்லை... நாங்கள் யாருடன் கூட்டணி என்பது 2 நாட்களில் அறிவிக்கப்படும். அன்புமணியுடன் கூட்டணி வைப்பவர்கள் ஏமாந்துதான் போவார்கள். சில சதிகாரர்கள் எங்கள் கட்சியை பலவீனப்படுத்தியுள்ளனர். தேர்தலில் எழுச்சி பெறுவோம்” என்றார்.