×

"தமிழன் என்ற முறையில் நான் பெருமையும், பெருமிதமும் அடைகிறேன்" - அன்புமணி பாராட்டு!!

 

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்புற நடத்தியதை நினைத்து தமிழன் என்ற முறையில் நான் பெருமையும், பெருமிதமும் அடைகிறேன் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி கடந்த 28ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வெகுவிமர்சையாக  நடைபெற்றது. இதில் 2000ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியானது பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவுபெற்றது.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் , "சென்னையில் நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. தமிழர்களின் கலாச்சாரம், விளையாட்டுகள் தோன்றிய வரலாறு, தமிழர்களின்  வலிமை ஆகியவை தத்ரூபமாக சித்தரித்துக் காட்டப்பட்டன. ஒட்டுமொத்த உலகமும் இதை பார்த்து அறிந்தது! சென்னையில்  நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்கவிழாவும்,  மாமல்லபுரத்தில் நடந்த போட்டிகளும் ஒட்டுமொத்த உலகமே பாராட்டும் வகையில் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன.  

null