×

எந்த சாதனையும் செய்யாமல் கூப்பன் கொடுத்து ஓட்டு கேட்கிறது திமுக- அன்புமணி

 

ஆரணியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ஆரணி அதிமுக வேட்பாளர் ஜெயித்தால் அமைச்சராவார் என்று  பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசுதாவை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி ‌ தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆரணி அண்ணாசாலை முன்பு பரப்புரையில் ஈடுபட்டார்.  அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ் அதிமுக பெண் வேட்பாளர் ஜெயசுதா வெற்றி பெற்றால் கட்டாயம் எடப்பாடி தலைமையில் அமரும் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று தெரிவித்தார். அன்புமணி பேச்சால் கூட்டத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் பேசிய அன்புமணி ராமதாஸ்,  எடப்பாடி பழனிச்சாமி ‌பதவியேற்று ஒரு மாதத்திற்குள் ‌திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிப்பார் என்று பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்கும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினார். மேலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினார் எடப்பாடி பழனிசாமி என்று பரப்புரையில் அன்புமணி பேசினார். அதுமட்டுமில்லாமல் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்களுக்கு தனி பட்ஜெட் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த பரப்பரையில் அதிமுக, பாமக, மற்ற கூட்டணி கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எந்த சாதனையும் செய்யாமல் கூப்பன் கொடுத்து ஓட்டு கேட்கிறது திமுக என்றும் அன்புமணி விமர்சித்தார்.