“வன்னியர், பட்டியலினத்தவர் ஒன்று சேர்ந்தாலே நாம் ஆட்சிக்கு வரலாம்”- அன்புமணி ராமதாஸ்
வன்னியர் இன சமுதாயமும், பட்டியலின சமுதாயமும் ஒன்று சேர்ந்தாலே நாம் ஆட்சிக்கு வரலாம் என என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில், மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு "நினைவேந்தல் சங்கமம்" நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், “வன்னியர் இன சமுதாயமும், பட்டியலின சமுதாயமும் ஒன்று சேர்ந்தாலே நாம் ஆட்சிக்கு வரலாம். ஆனால் நம்மை சிலர் சூழ்ச்சி செய்து பிரித்தாளுகிறார்கள். அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். நாம் எல்லோரும் வாழ வேண்டும், வளர வேண்டும். ஆளுங்கட்சிக்கு அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்த சமுதாயம் வன்னியர் சமுதாயம் (23). இரண்டாவது அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்த சமுதாயம் பட்டியலினத்தவர் சமுதாயம் (21). இந்த 2 சமுதாய மக்களுக்கு ஆளுங்கட்சி என்ன செய்தது? எங்களது ஓட்டு மட்டும் வேண்டுமா? பாமக முதன்முதலில் தலித் ஒருவருக்குதான் அமைச்சர் பதவி கொடுத்தது” என்றார்.