×

ராமதாஸ் நமது குலசாமி, குலதெய்வம்- அன்புமணி 

 

அய்யா நம்முடைய குலதெய்வம். அவர் நமது கொள்கை வழிகாட்டி, தொலைநோக்கு சிந்தனையாளர். ராமதாசின் கொள்கையை கடைபிடிப்போம் என  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகள் உடனான 2ஆம் நாள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், “கட்சியில் பொறுப்புகள் கொடுக்குறது, நீக்குறதுலாம் செல்லாது. நான் இருக்கேன். அடுத்த 10 நிமிடத்தில் லெட்டர் வந்துரும். குழப்பங்கள் எல்லாம் சரியாகிடும். பொதுக்குழுவால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான். கட்சியில் விதிகள் எல்லாம் இருக்கு. தலைவர்தான் கையெழுத்து போட வேண்டும். அவர் தான் எல்லாமே நியமனம் செய்ய வேண்டும். பாமகவை மேலும் வலுப்படுத்த புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். ஏற்கனவே உறுப்பினர் அட்டை வைத்துள்ளவர்கள் புதுபித்துக்கொள்ள ஏண்டும். அதிக உறுப்பினர்களைச் சேர்த்தால் தங்க மோதிரமோ தங்கச் சங்கிலியோ தர மாட்டேன். உண்மையான உறுப்பினர்களை மட்டும் சேர்த்தால் போதும். 

கடந்த காலங்களில் நிறைய அனுபவித்துவிட்டேன். புதியதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிற்கு தொடர்புகொண்டால் பீகாருக்கு அழைப்பு போகிறது. அய்யா நம்முடைய குலதெய்வம். அவர் நமது கொள்கை வழிகாட்டி, தொலைநோக்கு சிந்தனையாளர். ராமதாசின் கொள்கையை கடைபிடிப்போம். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை மீட்பதற்காக புதிதாக நடைபயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன். நாம் ஒரே குழுவாக இருந்து பணியாற்ற வேண்டும். நீங்கள் எனக்கு அடிபணிந்தவர்கள் அல்ல. சக தோழர்கள், உங்களை ஏன் மாற்ற வேண்டும். நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்றார்.