×

என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகத் தயார் - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி

 

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என ராகுல்காந்தி ஒரு வரி கூறினால் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகத் தயார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “மேகதாது விவகாரத்தில் பாஜகவும் காங்கிரஸும் கூட்டு சதி செய்கிறது. இந்த சூழ்ச்சியில் முதலமைச்சர் விழக்கூடாது. பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அந்தமானில் காடுகளை அழிக்க கூடாது என குரல் கொடுக்கும் ராகுல்காந்தி மேகதாதுவில் காடுகளை அழிப்பதை தடுக்க குரல் கொடுப்பாரா? மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என முதலமைச்சருடன் சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்த நான் தயார். அணை கட்ட கூடாது என ராகுலுக்கு அழுத்த தர மாணிக்கம் தாகூருக்கு தைரியம் இருக்கா? தமிழகத்திற்கு ஆதரவாக ராகுல் காந்தி பேசிவிட்டால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற தயார். தமிழகம் வரும் ராகுல்காந்தி மேகதாது வேண்டாம் என பேசுவாரா? ஒரே ஒரு வார்த்தை தமிழகத்திற்கு ஆதரவாக ராகுல் பேசுவாரா? மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என ராகுல்காந்தி ஒரு வரி கூறினால் NDA கூட்டணியில் இருந்து விலக தயார். தண்ணீர் தரமாட்டோம் என சொல்லும் கர்நாடகாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதா? மேகதாது அணை குறித்து கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் விஜய் செல்வது மிகப்பெரிய தவறு. முதலமைச்சர் விஜயை யார் வழிநடத்துகிறார்கள் என தெரியவில்லை” என்றார்.