×

விஜயின் கனவு நிறைவேற அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் - அன்புமணி நேரடி அழைப்பு

 

என்.டி.ஏ. நோக்கமும், விஜயின் நோக்கமும் ஒன்றுதான் அதனால் தவெக தொண்டர்களுக்கு அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக கூட வரக்கூடாது என்பதே எங்கள் கூட்டணியின் நோக்கம். விஜய் அதிக வாக்குகள் பெறலாம்; ஆனால் வெற்றி சாத்தியம் குறைவு. எனவே வாக்குகளை வீணாக்க வேண்டாம். விஜயின் இலக்கு திமுக ஆட்சியை அகற்றுவதே. அது நிறைவேற வேண்டுமெனில் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். விஜய் ரசிகர்கள் அவருக்கே வாக்களிப்பார்கள்; ஆனால் விஜயின் ஆதரவாளர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள். அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் விஜயின் கனவு நிறைவேறும். 2016இல் நான் தனியாக போட்டியிட்டபோது மக்கள் ஆதரவு இருந்தது. ஆனால் வெற்றி பெற முடியாது என்ற எண்ணத்தில் பலர் அதிமுகக்கு வாக்களித்ததால் திமுக தோற்றது. அதே சூழ்நிலை தற்போது உள்ளது. எனவே விஜயின் ஆதரவாளர்கள் அதிமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.மகளிர் மசோதாவை தோற்கடித்துவிட்டு ஸ்டாலின் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார். மசோதா நகலை ஸ்டாலின் எரித்தது குறித்து தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.