×

திருமாவை தி.மு.க மிரட்டியது- அன்புமணி

 

தி.மு.க மிரட்டியதால்தான் திருமாவளவன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுக கூட்டணியில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் போட்டியிடுவதாக கூறிவந்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், நேற்று திடீரென தான் போட்டியிடவில்லை என அறிவித்தார். காட்டுமன்னார்கோயில் வேட்பாளராக ஜோதிமணி இளையபெருமாள் வி.சி.க தலைவர் திருமாவளவன் அறிவிக்கப்பட்ட நிலையில், தான் வி.சி.க அல்ல, காங்கிரஸைச் சேர்ந்தவர் என்று ஜோதிமணி இளையபெருமாள் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
மேலும் நான் காங்கிரஸில்தான் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்; போட்டியிட வாய்ப்பு கேட்டு மனு அளித்தேன்;  அங்கு பதில் இல்லை; திடீரென என்னை வேட்பாளராக  அண்ணன் திருமாவளவன் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது  என்றும் விசிக தலைவர் திருமாவளவனால் காட்டுமன்னார்கோயில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜோதிமணி பேட்டியளித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் தி.மு.க மிரட்டியதால்தான் திருமாவளவன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக கூட்டணியில் 5 ஆண்டுகாலமாக வாய் பேச முடியாமல் திருமாவளவன் தவித்துக் கொண்டிருக்கிறார் என்றும் அன்புமணி கூறியுள்ளார்.