என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ்ஸை கொண்டு வர பேசிவருகிறோம்- அன்புமணி ராமதாஸ்
என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ்ஸை கொண்டு வர பேசிவருகிறோம், விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “என்.டி.ஏ கூட்டணியில் ஓபிஎஸ்ஸை கொண்டு வர பேசிவருகிறோம், விரைவில் நல்ல முடிவு எடுப்பார். மேலும் சில கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய உள்ளன. எதிர்க்கட்சிகள் கடந்த தேர்தலில் சிதறி இருந்ததால் தான் திமுக வெற்றி பெற்றது. பிரிந்த கட்சிகள் இணைந்துள்ளதால் அச்சத்தில் உள்ளது. கூட்டணி ஆட்சி குறித்து தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்யப்படும்.
பிரதமர் தலைமையில் நாங்கள் பொதுக்கூட்டமாக தான் நடத்தினோம்.. ஆனால் மாநாடு போல் அமைந்து விட்டது.. அதன் பிறகு தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. எங்கள் கூட்டணியை பார்த்து திமுக பயத்தில் உள்ளது. தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த தேர்தலில் சிதறிக்கிடந்தன. இம்முறை இணைந்துள்ளோம்” என்றார்.