×

“திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பதற்காகவே ஒன்று சேர்த்து உள்ளோம்”- அன்புமணி

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. 

இந்த பொதுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி, “தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி, கெ்டுங்கோல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் தொடக்கமாக இந்த பொதுக்கூட்டம் நடந்துள்ளது. அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி இணைந்து இன்று மாநாடு போல் பொதுக்கூட்டத்தை நடத்தி உள்ளது. இன்றயை தினம் ஐந்து லட்சம் தொண்டர்கள் வருகை புரிந்தார்கள். தமிழகத்திற்கு பல திட்டங்களை மேற்கொள்ள மோடி உறுதி கொடுத்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அமையும் அதற்கான தொடக்கம் தான் இன்று நடந்துள்ளது. திமுக ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்பதற்காகவே ஒன்று சேர்த்து உள்ளோம்” என தெரிவித்தார்.