”எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே தமிழ்நாட்டு பெண்களுக்கு பாதுகாப்பு”- அன்புமணி
எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சராக வந்தால் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சராக வந்தால் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு. மக்கள் திமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நகலை முதல்வர் எரித்தது ஒரு குற்றச்செயல். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. எனவே வரும் தேர்தலில் எதிர்க்கட்சியாக கூட திமுக வரக்கூடாது. தமிழக மக்களின் பேராதரவுடன் இன்னும் இரண்டே வாரங்களில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்பார்” என பேசினார்.