×

“கிழிந்த வேட்டியை கட்டிக்கொண்டு ராமதாஸிடம் நடித்து ஜி.கே.மணி ரூ.2,000 கோடி சேர்த்துட்டார்”- அன்புமணி

 

வேண்டுமென்றே கிழிந்த வேட்டியை கட்டிக்கொண்டு மருத்துவர் அய்யா  அவர்களிடம் நடித்து 2000 கோடி சொத்து சேர்த்த திமுக கைகூலி ஜி.கே.மணி இந்த சமுதாயத்தை கெடுத்ததை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.

ஏரியூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ், “வன்னியர் - பட்டியல் இன மக்கள், இஸ்லாமியர் - வன்னியர் சமூக மக்கள் மோதிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த மக்கள் படிக்கக் கூடாது, வேலைக்குப் போகக் கூடாது, சுய மரியாதையுடன் இருக்கக் கூடாது என மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். வேண்டுமென்றே கிழிந்த வேட்டியை கட்டிக்கொண்டு மருத்துவர் அய்யா  அவர்களிடம் நடித்து 2000 கோடி சொத்து சேர்த்த திமுக கைகூலி ஜி.கே.மணி, இந்த சமுதாயத்தை கெடுத்ததை யாராலும் தாங்கிக் கொள்ள முடியாது. ஸ்டாலின் என்றாலே அவமானம். ஜி.கே.மணி ஸ்டாலினுக்கு அடிமை. தமிழ் குமரன் உதயநிதி ஸ்டாலினுக்கு அடிமை. ஜி.கே. மணி எப்படினா என்னையும், எங்க அப்பாவையும் பிரிச்சிட்டாரு, அவரும் அவர் பையனும் நல்லாருக்கனு எங்களை பிரித்துவிட்டார். தயவுசெய்து என் தந்தை ராமதாஸை யாரும் திட்டாதீர்கள்; அவருக்கு 89 வயது ஆகிவிட்டது, ஒரு குழந்தை போல மாறிவிட்டார். எவருக்கு என்னை பற்றி பேசுவதற்கு அத்தனை உரிமையும் இருக்கிறது. பாமகவின் அடையாளம் கண்டு, இன்று பாமகவிற்கு எதிராகவே தேர்தலில் போட்டியிடும் தமிழ்குமரன் ஒரு துரோகி. பென்னாகரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜிகே மணியின் மகனை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும்” என்றார்.