×

கூப்பன் கொடுக்கும் தி.மு.க.வினரிடம் இதை கேளுங்கள்... ஓடிவிடுவார்கள்- அன்புமணி சொல்லும் புது ஐடியா

 

தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் செளமியாவை ஆதரித்து, அக்கட்சி தலைவர் அன்புமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் பேசிய அன்புமணி, “திமுகவினர் ரூ.8,000 போலி கூப்பன் கொடுத்து வாக்கு கேட்டால், அந்த கூப்பனை நீங்களே வைத்துக் கொண்டு, 2,000 ரூபாய் ரொக்கமாக கையில் கொடுங்கள், மீதி 6,000 ரூபாயை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறுங்கள்... அவர்கள் ஓடி விடுவார்கள். தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும். இந்த கொடுங்கோல் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். கஞ்சா ஆட்சி, சாராய ஆட்சி, ஊழல் ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

தருமபுரி - மொரப்பூர் ரயில்வே திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ஆண்டுதோறும் கொடுக்கும் ரூ.100 கோடியில் ஒரு பைசாவை கூட திமுக அரசு பயன்படுத்தவில்லை; அதனால் அந்த திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. தருமபுரியில் சிப்காட் கொண்டு வருவோம் என்று திமுக சொன்ன இடத்தில் வெறும் கற்கள் மட்டும்தான் இருக்கிறது.  எடப்பாடி பழனிசாமி முதல்வரானால் தருமபுரி மாவட்டத்திற்கு சிப்காட் கொண்டுவரப்படும்; இளைஞர்களுக்கு சொந்த ஊரில் வேலை வய்ப்பு கிடைக்கும். முதல்வர் ஸ்டாலின் சொல்வது போல ஜி.கே.மணி அய்யாவின் வலது கரமில்லை; அவர் ஸ்டாலினோட வலது கரம். தமிழ் குமரன் உதயநிதி ஸ்டாலினின் வலது கரம்.