ரூ.8,000 கூப்பன் கொடுக்கின்ற திமுக வேண்டுமா? ரூ.10,000 வங்கியில் கணக்கில் செலுத்தும் இபிஎஸ் வேண்டுமா?- அன்புமணி
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.பழனிச்சாமி ஆதரித்து பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பிரச்சார மேற்கொண்டார். அப்போது திறந்த வேனில் பேசிய அவர், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். 420 திமுக, கள்ளச்சாராய திமுக, கஞ்சாவிற்கென்று திமுக, பெண்களை மானபங்கம் செய்கின்ற திமுக, குழந்தைகளை கொலை செய்கின்ற திமுக, ஊழல் செய்கின்ற திமுக என தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசிய அன்புமணி, “இந்த தேர்தல் ஆனது திருக்கோவிலூர் தொகுதிக்கான தேர்தல் மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கான முக்கியமான தேர்தல். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களையும் பெண்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன், பெற்றோர்களை கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இந்த தேர்தலில் எங்களுக்கு வாக்களியுங்கள். எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள். இந்த ஐந்து ஆண்டு காலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்கள். பெண்களை கெடுத்து கொலை செய்கின்ற இந்த கேடுகெட்ட திமுகவை துரத்தி அடிக்க வேண்டும். நான் இரண்டு பெண் பிள்ளைகளை பெற்ற அப்பா என்ற முறையில் ஆதங்கத்தில் கேட்கிறேன். இரண்டரை வயது குழந்தையை திமுக மாவட்ட இளைஞரணி நிர்வாகி கெடுத்து கொலை செய்துள்ளான். மதுராந்தகத்தில் 14 வயது சிறுமியை இரண்டு பேர் போதை உட்கொண்டே கஞ்சாவில் கெடுத்துள்ளனர். ஆறு மாதத்திற்கு முன் கும்மிடிப்பூண்டியில் 8 வயது குழந்தையை காணாமல் போய் மூன்று மணி நேரத்தில் ரத்த காயத்துடன் ஒரு கொடூரன் அந்த குழந்தையை கெடுத்துள்ளான். இப்படி பெண்களை கெடுத்து கொலை செய்யும் இந்த மானங்கெட்ட திமுக ஆட்சியை துரத்தி அடிக்க வேண்டும், இதை அனைத்தையும் பெற்றோர்கள் தாய்மார்கள் நினைவில் வைத்துக் கொண்டு இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும்.
இந்த பகுதியில் உள்ள திமுகவினரே அவரை தோற்கடித்து விடுவார்கள். திமுகவினருக்கு அவர் மீது அவ்வளவு கோவம் உல்லது. நெல்லுக்கு 3500 ஆதார விலை தருவதாக அதிமுக கூறி உள்ளது. விவசாயிகள் நமக்கு சோறு போடுகின்ற ஐந்தாண்டு கால ஆட்சி செய்த முதல்வர் செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேட்க வேண்டும். ஆனால் அவர் எந்த சாதனையும் செய்யவில்லை அதனால் தான் அதனை சொல்லி கேட்க முடியவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 8000 கூப்பன் கொடுப்போம் என திமுகவினர் வாக்கு சேகரிக்கிறார்கள், அந்த கூப்பன் வாங்குவதற்கு திமுக காரனுக்கு 3000 லஞ்சம் வழங்க வேண்டும், அதேபோல் அந்த கூப்பனையும் திமுக காரர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமே வழங்குவார்கள், உங்களுக்கு வழங்க மாட்டார்கள். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி 10,000 உங்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துகிறேன் என்றார். 8000 கூப்பன் காகிதம் வேண்டுமா வங்கிக் கணக்கில் 10 ஆயிரம் வேண்டுமா என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்றார்.