×

“பொதுக்குழுவுக்கு அனுமதி தரக் கூடாது”- ராமதாசுக்கு எதிராக அன்புமணி தரப்பு மனு

 

சேலத்தில் வரும் 29ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் நடைபெறும் பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கு அனுமதி தரக்கூடாது என்று அன்புமணி தரப்பினர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 

பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர். ராமதாஸ் அணி சார்பில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 29ஆம் தேதி ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அந்தக் கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக ,  மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் தலைமையில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது. அதில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பொதுக்குழுவை கூட்டவும் அதனை தலைமை ஏற்கவும் தலைவர் அன்புமணியை தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. எங்கள்  சார்பாக எந்த அனுமதியும் பாதுகாப்பும் நாங்கள் கோரப்படவில்லை. கட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தி அனுமதி கேட்டால் அது சட்டவிரோதமானது, அதற்கு அனுமதி தரம வேண்டாம் எனவும், பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரையும் அதன் கொடியையோ, அடையாளங்களையும் தவறாக பயன்படுத்தும் நபர்கள் மீது சட்டப் நடவடிக்கை எடுக்கும்படி பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி தரப்பினர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.