×

திமுக ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்புங்க- அன்புமணி

 

தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்  ஊர்வலமாக சென்று இறுதிகட்ட பிரச்சாரத்தை செய்து வாக்கு சேகரித்தார். இந்த ஊர்வலத்தில் ஏராளமான கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பாமகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தனர்.

பரப்புரையில் பேசிய அன்புமணி ராமதாஸ், “நான் முதலில் நன்றி சொல்கிறேன். பாமக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டுக்கும், பெண்களுக்கும் விடுதலை கொடுக்கும் தேர்தல். செய்யாறு பக்கத்தில் இருக்கும் கிராமத்தில், 8 மனித மிருகங்கள், போதையில் சின்னாபின்னமாக்கி விட்டார்கள். இன்று அந்த குழந்தை உயிருக்கு போராடிட்டு இருக்கு. நேற்று பிரம்மதேசம் பகுதியில் நடந்த சம்பவத்தில் இருந்து, சௌமியா வேதனையில் இருக்கிறார். உங்களுக்கு நல்ல வேட்பாளரை கொடுத்துள்ளேன். கடந்த தேர்தலில் ஒருவரை தேர்ந்தெடுத்தீங்க, ஆனால் அவரால், யாருக்கும் பயணில்லை. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டத்தில் இல்லாத இயற்கை வளம் தருமபுரி மாவட்டத்தில் உள்ளது. காவிரி, தென்பெண்ணை ஆறு ஓடுது. இந்த தண்ணீரை ஏரிகளில் நிரப்பினால், சுயமரியாதையுடன் வாழலாம்.

கடந்த ஆண்டு 3000 கோடிக்கு டாஸ்மாக் விற்பனை. அதில் 700 கோடி கொடுத்தால், நிறைவேற்றலாம். கடந்த வாரம் இங்கே வந்த ஸ்டாலின் திட்டங்களை அறிவிக்கவில்லை. என்னையும், எடப்பாடி பழனிசாமியையும் அசிங்கமாக திட்டிட்டு போனார். திமுகவுக்கு நிர்வாகம் தெரியாது, வளர்ச்சி தெரியாது. 5 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தீர்கள். அவர்கள் தோற்றுவிட்டார்கள். தமிழ்நாட்டில்  உள்ள அனைவரும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வாருங்கள். திமுக ஆண்டது போதும், வீட்டுக்கு அனுப்புங்கள். கஞ்சா, போதை திமுக. பெண்கள், விவசாயிகள், நெசவாளர்கள், இளைஞர்களுக்கு விடுதலை வாங்கி கொடுங்கள். இந்த மாற்றம் வெறும் சௌமியாவுக்கு மட்டுமில்லை. தமிழ்நாடு முழுவதும் மாற்றத்தை கொண்டு வாருங்கள். திமுக இந்த மாவட்டத்திற்கு எள்ளளவும் செய்யவில்லை. திமுக ஸ்டாலினை வீட்டிற்கு அனுப்புங்க. போதைப் பொருளால் இளைஞர்களை அடிமைப்படுத்தும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுங்கள்”  என தெரிவித்தார்.