×

21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர்..!!

 

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார்.செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில், வரலாற்றிலேயே முதல்முறையாக தேசியப் பாடலான "வந்தே மாதரம்" இசைக்கப்பட்டது. செங்கோட்டையிலிருந்து நடைபெற்ற நாட்டின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

 

இந்திய நாட்டின் 80வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, உரையாற்றிய அவர், ”இந்தச் சுதந்திர தினத்தன்று, பாபு மற்றும் அனைத்துச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் புரட்சியாளர்களுக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்” எனத் தெரிவித்தார்.

 

இன்று நாம் அனைவரும் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம். இன்று 'வந்தே மாதரம்' என்ற முழக்கம் ஒவ்வொரு இதயத்திலும் எதிரொலிக்கிறது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி பறக்கிறது, ஒவ்வொரு மனதிலும் அது நிறைந்திருக்கிறது; புதிய தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு, தேசம் மிகுந்த உற்சாகத்துடனும் துடிப்புடனும் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றார்.

#WATCH | Delhi: Prime Minister Narendra Modi hoists the National Flag at Red Fort on the 80th Independence Day.

The hoisting of the National Flag was synchronised with the 21-Gun Salute by the gunners of the 1721 Field Battery (Ceremonial). The ceremonial battery, utilising the… pic.twitter.com/rbaiIKQpPU

— ANI (@ANI) August 15, 2026