☰
×

இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு மகத்தான பங்களிப்பு - பிரதமர் மோடி

 

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு நாளில் மனம் நிறைந்த வாழ்த்துகள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 

Warm greetings to the people of Tamil Nadu on the special occasion of Tamil Nadu Day!

The hardworking and enterprising people of Tamil Nadu have made outstanding contributions to India’s progress. From manufacturing, automobiles and textiles to electronics, space technology,…

— Narendra Modi (@narendramodi) November 1, 2026


இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், "தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு தினத்தில் மனம் நிறைந்த  நல்வாழ்த்துகள்! தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.

தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது. இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.