×

பிரதமர் மோடி வேலூர் வரும் தேதி மாற்றம் 

 

பிரதமர் மோடியின் வேலூர் வருகை மார்ச் 6ம் தேதியில் இருந்து மார்ச் 7ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 7ஆம் தேதி வேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்  நடைபெறும் பொது கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன் காரணமாக பிரதமர்  பங்கேற்கும் கூட்டத்திற்கு  இடத்தினை தேர்வு செய்வதற்காக இன்று மாலை பாஜக மாநில துணைத்தலைவர் கரு, நாகராஜன், பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, பாஜக மாவட்ட தலைவர் தசரதன் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு, வேலழகன் உள்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வேலூர் கோட்டை மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தியாயினி, பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் வேலூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதற்காக வேலூர் கோட்டை மைதானம்,பள்ளிகொண்டா அருகே உள்ள கந்தனேரி, அகரம்சேரி ஆகிய இடத்தினை பார்வையிட்டு தேர்வு செய்ய உள்ளோம். இறுதியாக ஓர் இடத்தில் தேர்வு செய்வோம். பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். பிரதமர் நரேந்திர மோடி  வேலூர் வருகை என்பது மிகப்பெரிய அரசியல் மட்டுமல்ல ஆட்சியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அனைத்து தலைவர்களும் நிர்வாகிகளும் பங்கு பெறுவார்கள்” எனக் கூறினார்.