மார்ச் 1 ஆம் தேதி புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை- ட்ரோன்கள் பறக்க தடை
பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரிக்கு மார்ச் 1 ஆம் தேதி வருவதையொட்டி, டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 163}ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்ட நிர்வாக மாஜிஸ்திரேட்டும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் அவர், பிரமதர் வருகையொட்டி பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் ஆகாயத்தில் விமானம் போன்ற உபகரணங்கள் பறப்பதில் தடை செய்யப்பட்ட மண்டலமாக புதுச்சேரி பிராந்தியத்தை அறிவிக்க வேண்டும் என்று பாதுகாப்பு காவல்துறை கண்காணிப்பாளர் கேட்டுக் கொண்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு காரணமாக ட்ரோன்கள், பலூன்கள் வாயிலாக புகைப்படம், விடியோ உள்ளிட்டவை எடுக்கத் தடை செய்யப்படுகிறது. மேலும், இது போன்ற காரியங்களில் யாராவது ஈடுபட்டாலும் முன்னெச்சரிக்கையாகத் தடை செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மீறுவோர் மீது பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 163}ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளார்.