×

தோழர் நல்லகண்ணு மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

 

சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.


இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நூற்றாண்டு கண்ட பொதுவுடைமை போராளி ஐயா நல்லகண்ணு  உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். திருநெல்வேலி விவசாயக் குடும்பத்தில் பிறந்த நல்லகண்ணு, இந்திய சுதந்திர போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் எனத் தனது வாழ்நாளில் குறிப்பிட்ட பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர்.

இந்நிலையில் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “சமூகத்தின் அடித்தட்டு மக்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காக குரல் கொடுத்தவர் நல்லகண்ணு. சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் மதிக்கப்பட்டவர். அவரது எளிமையான வாழ்க்கைக்காக போற்றப்பட்டவர். அவரை இழந்துவாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.