×

பிரதமர் மோடி இன்று இஸ்ரேலுக்கு பயணம்..!!

 

இஸ்ரேலுக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இன்று பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.

இந்தியா, இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது இந்த பயணத்தின் முக்கிய இலக்காகும்.

2017ம் ஆண்டு இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றிருந்தார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து இஸ்ரேலுக்கு பயணிப்பது சர்வதேச நாடுகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் பார்லிமென்டில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். இரு நாடுகளும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.