டிச.,11ல் கனடா செல்கிறார் பிரதமர் மோடி..!!
Oct 16, 2026, 10:26 IST
டிசம்பர் 11,12ம் தேதிகளில் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி கனடா செல்ல இருப்பதாக ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதகரம் தெரிவித்துள்ளது.
இருநாடுகளின் தலைவர்களும் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பிரதமரின் பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2023ல் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பிருக்கலாம் என்று அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்தது. இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தால் இருநாடுகளின் உறவு மேலும் வலுப்பெறும் என்று இருநாட்டு தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.