×

77 அடி உயர ராமர் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!

 
தெற்கு கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமரின் 77 அடி வெண்கல சிலை, நாளை புனிதமாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் இன்று காலை ஸ்ரீமத் வித்யாதீஷ் தீர்த்த சுவாமியால் துவங்கி நடைபெற்று வருகிறது.

நாளை பிற்பகல், பிரதமர் மோடி, சிலையை திறந்து வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான தரிசனம் மற்றும் சபா காரியக்ரமம் நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரதீப் ஜி. பாய், மடத் துறவி வித்யாதீஷ் தீர்த்த் ஸ்ரீபாத் வேடர் கூறியதாவது: மடத்தின் 550 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 77 அடி உயர ராமர் சிலை திறக்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
 

இந்த நிகழ்வில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.