×

நாளை மதுரை வருகிறார் பிரதமர் மோடி..! 

 

மதுரை மண்டேலா நகரில், மார்ச் 1ல், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், பிரதமர் மோடி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க., அன்புமணி, அ.ம.மு.க., தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மார்ச் 1 காலை, புதுச்சேரி அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, ஹெலிகாப்டரில் மதியம், 2:45 மணிக்கு தஞ்சாவூர் செல்கிறார். அங்கு, ஓய்வுக்கு பிறகு, விமானத்தில் புறப்பட்டு மதியம், 3:30 மணிக்கு மதுரை வருகிறார். விமான நிலைய வளாகத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில், புதுப்பிக்கப்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களை திறந்து வைக்கிறார். பரமக்குடி - ராமநாதபுரம் நான்குவழிச் சாலை உள்ளிட்ட திட்டப்பணிகளை துவக்கி வைக்கிறார்.

பின், அங்கிருந்து புறப்பட்டு மாலை, 4:00 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்கிறார். அங்கு, தரிசனம் செய்துவிட்டு மாலை, 4:30 மணிக்கு புறப்பட்டு, மண்டலோ நகர் வருகிறார். அங்கு பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு மாலை, 5:30 மணியளவில் புறப்பட்டு, மதுரை விமான நிலையம் வருகிறார். மாலை, 6:10 மணிக்கு டில்லி புறப்பட்டு செல்கிறார்.