×

‘ஒளவையார், பாரதியார் பாடலை’ மேற்கோள் காட்டி.. பிரதமரின் அதிரடி பேச்சு!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பேசிய நரேந்திர மோடி ஒளவையார், பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டினார். தமிழக அரசு சார்பில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வணக்கம் சென்னை.. வணக்கம் தமிழ்நாடு என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார் மோடி. இது நிகழ்ச்சியில் கலந்து கொண்டோரின் காதில் தேன் வார்ப்பது போல இருந்தது. இதைத்தொடர்ந்து, தனக்கு
 

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பேசிய நரேந்திர மோடி ஒளவையார், பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டினார்.

தமிழக அரசு சார்பில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வணக்கம் சென்னை.. வணக்கம் தமிழ்நாடு என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார் மோடி. இது நிகழ்ச்சியில் கலந்து கொண்டோரின் காதில் தேன் வார்ப்பது போல இருந்தது.

இதைத்தொடர்ந்து, தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாக பெருமிதத்துடன் மோடி தெரிவித்தார். உற்சாகமும் படைப்பாற்றலும் மிக்க நகரமாக சென்னை திகழ்கிறது என்று கூறிய அவர், தமிழகத்திற்காக தொடங்கப்பட்டிருக்கும் திட்டங்கள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சியை நோக்கியவை என்று கூறினார். இதனிடையே நீரை சரியாக பயன்படுத்தி அதிக மகசூல் பெரும் தமிழக விவசாயிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்த பிரதமர், ‘வரப்புயர நீர் உயரும்.. நீர் உயர நெல் உயரும்..நெல் உயர குடி உயரும்.. குடி உயர கோல் உயரும்..கோல் உயர கோன் உயர்வான்’ என்ற ஒளவையார் பாடலை மேற்கோள் காட்டினார்.

மேலும் அர்ஜுன் பீரங்கிகளை நாட்டுக்காக அர்ப்பணித்தற்கு, ‘ஆயுதம் செய்வோம்… நல்ல காகிதம் செய்வோம்’ என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள் காட்டி பேசினார். மோடியின் இந்த பேச்சு, நிகழ்ச்சியில் கலந்து கொண்டோரை கவர்ந்துள்ளது. மத்திய அரசின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பலர் தமிழ் பழமொழிகளையும், திருக்குறள்களையும் மேற்கோள் காட்டி பேசுவது ஒன்றும் புதிதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.