×

“ஒரு ஏவுகணை கூட இந்திய மண்ணை தொடவில்லை”- பிரதமர் மோடி

 

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “மே.9 ஆம் தேதி பாகிஸ்தான் ஆயிரம் ஏவுகணைகளை ஏவியது. ஒரு ஏவுகணை கூட இந்திய மண்ணை தொடவில்லை. பாகிஸ்தான் ஏவிய அனைத்து ஏவுகணைகளையும் நடுவானிலேயே இடைமறித்து தாக்கி அழித்தோம். இந்தியாவை தாக்க நினைத்தால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். போரை விரும்பவில்லை என நாங்கள் மிக தெளிவாக உலகிற்கு கூறியுள்ளோம். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதை நான் தெளிவுபடுத்தினேன். குண்டுக்கு பதில் குண்டுதான் என நான் அமெரிக்க துணை அதிபருக்கும் தெளிவு படுத்தினேன். 

ஆபரேஷன் சிந்தூர் - பாகிஸ்தான் ராணுவ தளபதி தாக்குதலை நிறுத்துமாறு தொலைபேசி வாயிலாக கெஞ்சினார். மே 8,9 ஆம் தேதிகளில் நாம் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் பாகிஸ்தானை சரணடையச் செய்தது. ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்படவில்லை, இன்னும் தொடர்கிறது. உலகமே இந்திய படைகளை மதித்தாலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் பாராட்டும் மனதே இருப்பதில்லை. காங்கிரஸின் சிறுபிள்ளைதனமான விமர்சனங்கள், வலிமைமிக்க நமது படைகளை சிறுமைப்படுத்துவதாக உள்ளது” என்றார்.